கல்லூரி சீருடையில் காதலன் வீட்டில் மாணவி !

கன்னியாகுமரியில் காதலன் வீட்டில் கல்லூரி சீருடையில் இருந்த மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்.;

Update: 2024-02-29 08:57 GMT
கல்லூரி மாணவியை ஒப்படைத்த போலீசார்
கன்னியாகுமரியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வருகிறார். காதலனின் வீட்டில் பெற்றோர் வேலைக்கு செல்வது வழக்கம். இதன் பயன்படுத்தி அடிக்கடி காதலன் வீட்டுக்கு கல்லூரி மாணவி வந்து   இருவரும் வீட்டுக்குள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினம் மாணவி கல்லூரி சீருடையுடன் காதலன்  வீட்டுக்கு வந்துள்ளார். காதலன் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு இருவரும் தனிமையில் இருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை தட்டி திறந்து, தனியாக   விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று கூறினார். இதை அடுத்து போலீசார் இதுபோன்று இனி நடக்கக் கூடாது என அறிவுரை கூறி, சம்பந்தப்பட்ட மாணவி வீட்டிற்கு தகவல் தெரிவித்து பெற்றோருடன்  அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News