கன்னியாகுமரி தூய அலங்கர உபகாரமாதா கோவில் கொடியேற்றம் 

கன்னியாகுமரி தூய அலங்கர உபகாரமாதா கோவிலில் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.

Update: 2023-12-09 10:04 GMT
கன்னியாகுமரி மாதா கோவில் கொடியேற்றம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மையானது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 17-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.   முதலாம் நாள் மாலை திருக்கொடிப்பவனியும், தொடர்ந்து  திருக்கொடி ஏற்றம் மற்றும் திருப்பலியும் நடந்தது. பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமை வகித்தார். கோட்டாறு மறை மாவட்ட அருட்பணியாளர் கிறிஸ்து ராஜ மணி மறையுரையாற்ரினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News