ஊட்டியில் கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வந்தார்.

Update: 2024-05-09 15:47 GMT

கர்நாடகா முதல்வர்

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அரசியல் கட்சித் தலைவர்கள் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும்,

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதியும் முடிந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் ஓய்வெடுக்க குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுப்பயணம் வந்து உள்ளார். இதையொட்டி மே 7-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஊட்டி வந்தார். அப்போது அவருடன் கர்நாடகா மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ், சமூக நலத்துறை அமைச்சர் மாதேவப்பா, எம்.எல்.சி. கோவிந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து ஊட்டி கேவ்லாக் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவிற்கு சென்றார். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று ஊட்டியில் உள்ள கர்நாடக அரசு தோட்டக்கலை துறை பூங்காவுக்கு காரில் சென்று சுற்றிப் பார்த்தார். சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்ததால் காரை விட்டு இறங்காமல், திரும்பி விட்டார். இதைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு மாலை 5 மணி அளவில் வந்தார்.

நாளை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி நடக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், பூங்காவில் காரை விட்டு இறங்காமல், காரில் இருந்தவாறு பார்த்துவிட்டு உடனடியாக திரும்பி விட்டார். வருகிற 11-ம் தேதி வரை ஊட்டியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

Tags:    

Similar News