கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா

நெடுங்குணம் கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-06-03 16:44 GMT

கலைஞர் பிறந்தநாள் 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது . திமுக செயலாளர் எம்.எஸ் தரணிவேந்தன் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளருமான மா.ஏழுமலை,கழக நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News