மனநலம் பாதித்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து மகள் புகார்.;
Update: 2024-03-20 18:36 GMT
மனநலம் பாதித்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மாவடியன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி லட்சுமி. இவர் கடந்த 12 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனால் விரக்தி அடைந்த லட்சுமி தனது மகள் பாக்கியம் என்பவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாக்கியம் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உயிரிழந்தலட்சுமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.