ஆத்தூர்; காசி முனியப்பன் கோயில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் காசி முனியப்பன் சுவாமி ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்லப்புவான் ஸ்ரீ பூவாயி ஸ்ரீ தேனாயி ஸ்ரீ பாப்பாத்தி ஸ்ரீ பட்டப்பன் மற்றும் ஸ்ரீ காசி முனியப்பன் ஆகிய சுவாமிகளுக்கு ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 29ஆம் தேதி முகூர்த்த கால் நடுதல் கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது இந்நிலையில் நேற்று இரவு பொங்கல் கூடை எடுத்தல் அன்னதானம் சுவாமி சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி இரவு நடைபெற்றது
இதில் மேளதாள முழங்க வான வேடிக்கையுடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதணை நடைபெற்றது. இதில் ராமநாயக்கன்பாளையம் கொத்தம்பாடி கொத்தம்பாடி புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தாராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.