கவுள்பாளையம் மங்கல மாரியம்மன் திருவிழா

கவுள்பாளையம் மங்கல மாரியம்மன் திருவிழாவில் பம்மை மேளம் முழங்க முளைப்பாரி மற்றும் பால் குட ஊர்வலம் நடைபெற்றது

Update: 2024-03-04 06:30 GMT
பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்றதும், சக்தி வாய்ந்த திருக்கோயில் "மங்கள மாரியம்மன் திருக்கோயில் " இத்திருக்கோவில் திருவிழா பிப்.25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 3ஆம் தேதி மாலை 4 மணியளவில் முளைபாரி, பால்குடம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. கவுள்பாளையம் எல்லையில் சக்தி அழைக்கப்பட்டு பக்தர்கள் தீசட்டி ஏந்தியும், முளைப்பாரி, கரகம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர், இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் , எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பம்பை, உடுக்கை மேளம் முழங்க அம்மன் வேடமிட்டு நடனமாடி வந்தனர். ஒம் சக்தி, பராசக்திபக்தி கோஷம் முழங்க பக்தர்கள் மனமுருக அம்மனுக்கு பல் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News