காவேரிப்பாக்கம்: கெங்கையம்மன் கோவிலில் வைகாசி திருவிழா!

காவிரிப்பாக்கம் அடுத்துள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்து முடிந்தது.

Update: 2024-05-30 07:55 GMT

காவிரிப்பாக்கம் அடுத்துள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்து முடிந்தது.


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கெங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூங்கரகம் வீதி உலாவின் போது பக்தர்கள் முதுகில் அலகு குத்தி, அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மதியம் கெங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல், அம்மனை வர்ணித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News