காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா!

காவலூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்தது.

Update: 2024-06-03 10:41 GMT

கெங்கையம்மன்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காவிநாச்சியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், உற்சவர் வீதிஉலா ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து கெங்கையம்மன் சிரசு, பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோவிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த கெங்கையம்மன் உடலில் பொருத்தி, கண்திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.இரவில் வாணவேடிக்கை, தாரை தப்பட்டையுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதேபோல் ஆலங்கநேரி கிராமத்தில் நடந்த கெங்கையம்மன் விழாவில் அம்மன் சிரசு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி, கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், வாணவேடிக்கையுடன் அம்மன் ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன. கீழ்முட்டுக்கூர் கிராமத்திலும் கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News