கடல் அலையில் சிக்கி கேரள தொழிலாளி உயிரிழப்பு 

ஹெலன் நகர் கடற்கரையில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட கேரள தொழிலாளியை குறும்பனை கடற்கரையில் போலீசார் சடலமாக மீட்டனர்.;

Update: 2024-04-02 03:25 GMT

பிஜு

குமரி மாவட்டம்  தேங்காப்பட்டணம் அருகே உள்ள ஆல்வின் என்பவர் கேரளா மாநிலம் வர்க்கலை என்ற இடத்தில்  கடை வைத்துள்ளார். இவரது தம்பி வீட்டில் மர வேலை செய்வதற்காக வாக்கலையில் இருந்து பிஜு (38) என்பவர் உட்பட ஒன்பது பேர் புதுக்கடை அருகே உள்ள அம்சி என்ற இடத்தில்  வந்து வேலை செய்துள்ளனர்.    நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் போது அனைவரும் தேங்காபட்டணம் அருகே ஹெலன் நகர் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றனர். அந்த பகுதியில் இவர்கள் நின்று கொண்டிருந்த போது, ராட்சத அலை  ஒன்று பிஜுவை கடலுக்குள் இழுத்து சென்றது.     

Advertisement

  இதில்  கடலில் மூழ்கி மாயமானார். இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து தேடுதலில்  ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் திலீப் குமார் என்பவர் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று குறும்பனை  கடற்கரையில் சடலம் மிதந்து வந்தது. இதை அடுத்து போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து விடுகின்றனர்.

Tags:    

Similar News