கோலோ இந்தியா விளையாட்டு போட்டி - தேர்வில் பங்கேற்க அழைப்பு

Update: 2023-12-11 03:23 GMT

ஆட்சியர் ப.முருகேஷ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை:- கோலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாட்டில் உள்ள இளைஞர் இடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒன்றிய அரசின் சார்ப்பில் நடதப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17 வயதிற்குட்டப்பட்ட மற்றும் 21 வயதிற்குட்டப்பட்ட பிரிவுகளை கொண்டு இருந்தது ஆனால் 2021ம் ஆண்டில் ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில், 18 வயதிற்க்குட்பட்ட பிரிவிலும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதே போன்று 2022 மத்தியப் பிரமதேசத்திலும் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர்  எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2023-யினை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2023- ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியினைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுப் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2023 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் சுமார் 5000 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடத்தப்படவுள்ள விளையாட்டுகள் விவரம்: தடகளம் (Athletics) / கால்பந்து (Football) / குத்துச்சண்டை (Boxing) / வாள்வீச்சு (Fencing) / கையுந்துப்பந்து (Volleyball) / um (Weightlifting) / m (Squash) / លំញ់ (Archery) / L(Judo) / कक्षा (Gatka) Cumúig (Table Tennis/ CULडणेनं (Badminton) / छी म (Cycling) / Car-Can (Kho- Kho) / ωππσπώ (Yogasana) wg (Wrestling) & (Hockey) / för (Swimming) / ππούφ &ύ (Gymnastics) / बांझील (Tennis) / gúráी (Shooting) / की (Kalatipayattu) / மல்லக்கம்பு(Mallakhamb) / கூடைப்பந்து (Basketball) / தாங் தா (Thang Ta)/ கபாடி (Kabbadi) / சிலம்பம் Silambam) Demo Game. ( மேலும் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் கூடைப்பந்து கபாடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றினை குழுப்போட்டிகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், அவர்களின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டு அணிகளில் இடம்பெறுவதற்கான தேர்வுப்போட்டிகள் ஏற்கனவே நடைபெற இருந்த நிலையில், மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில்நடத்தப்படவுள்ளது. தேர்வுப்போட்டிகள் விவரங்கள்: 1.கூடைப்பந்து பெண்கள் 12.12.2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 13.12.2023 அன்று காலை 7.00 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன. 2. கால்பந்து பெண்கள் 12.12.2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 12.12.2023 காலை 7.00 10 & 13.12.2023 காலை 7.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன. 3. கபாடி பெண்கள் 12.12 2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 13.12.2023 அன்று காலை 7.00 மணியளவில் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன. 4. கோ-கோ பெண்கள் 12.12.2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 13.12.2023 அன்று காலை 7.00 மணியளவில் அண்ணா உள்ளன. விளையாட்டரங்கம் திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன 5. வாலிபால் பெண்கள் 12.12.2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 13.12.2023 அன்று காலை 7.00 மணியளவில் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன 6. ஹாக்கி பெண்கள் 12.12.2023 அன்று காலை 7.00 மணி அளவிலும் (ம) ஆண்கள் 13.12.2023 அன்று காலை 7.00 மணியளவில் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கம் திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

பங்கேற்பதற்குத் தகுதிபெற விளையாட்டு வீரர்கள் வயதுச் சரிபார்ப்பு செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்க வேண்டும். 1. ஆதார் அட்டை (ம) பாஸ்போர்ட் 2. பள்ளிக் கல்விச் சான்றிதழ் (10ம் வகுப்பு) 3. பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி (அ) கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1,2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது) தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169/ 7401703484 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News