பள்ளி வளாகத்தில் மண்டியுள்ள கருவேல மரங்கள்
சிங்கம்புணரியில் பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
சிங்கம்புணரி பகுதி பள்ளிகளில் வளாகத்திற்குள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர்கள், சீமைக்கருவேல மரங்களால் பாம்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை, எஸ்.புதுார், உலகம்பட்டி, புழுதிபட்டி, ஏரியூர் உள்ளிட்ட அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் சில இடங்களில் வகுப்பறையை ஒட்டி சீமைக்கருவேல மரங்கள், புதர்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
பள்ளிகளை ஒட்டி காடுகளும் நீர்நிலைகளும் இருப்பதால் அந்த இடங்களில் பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அனைத்து அரசுப் பள்ளி வளாகத்திலும் வளர்ந்துள்ள புதர்கள், சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்றி மாணவர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்