கொடைக்கானல்; பிரையண்ட் பூங்காவில் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் திடீரென புகுந்த ஒற்றை காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி வனத்துறை மற்றும் பூங்கா ஊழியர்கள் காட்டெருமையை விரட்டினர்.

Update: 2024-05-12 01:47 GMT

காட்டெருமையை விரட்டிய வனத்துறை மற்றும் பூங்கா ஊழியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்க்பகுதிகளில் உலா வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது, இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் வருகின்ற மே 17ஆம் தேதி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது,இதனையடுத்து பூங்கா முழுவதும் லட்சக்கணக்கான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்களை பூங்கா பணியாளர்கள் தீவிரம் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நேற்று  மாலை சுமார் 6:30 மணியளவில் ஒற்றை காட்டெருமை திடீரென்று பூங்காவிற்குள் புகுந்தது. இதனை தொடர்ந்து பூங்கா பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டெருமை புதர் பகுதிகளில் நின்றதால் சுமார் 2 மணி நேரம் போராடி வனத்திறையினர் அதிக ஒலி எழுப்பி காட்டெருமையை பூங்காவில் இருந்து வெளியேற்றினர், பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் கடந்த பிறகு காட்டெருமை பூங்காவின் உள்ளே புகுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பூங்காவில் இருந்து வெளியேறிய காட்டெருமை பிரதான சாலையில் சென்று அங்கிருந்து தனியார் தோட்ட பகுதிக்கு சென்றது, இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டத்துடன், பரபரப்பாகவும் காணப்பட்டது.இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி தற்போது சீசன் காலம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கிறது,இதனையடுத்து நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெரிமைகளால் மனித விலங்கு மோதல் ஏற்படுவதற்கு முன் காட்டெருமைகள் நகர்ப்பகுதிகளில் தடுப்பதை கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்த வேண்டுக்கோள் எழுந்துள்ளது.

Tags:    

Similar News