கொப்பரை தேங்காய் ஏலம்
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் ரூ.2.25 லட்சத்திற்கு ஏலம் போனது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 12:10 GMT
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் ரூ.2.25 லட்சத்திற்கு ஏலம் போனது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 65மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ரூ.73.90 முதல் ரூ.86.10 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.61.30 முதல் ரூ.71.10 என மொத்தம் ரூ.2.25லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற 22ல் நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.