கோதைய ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அருவியில் குளிக்க தடை விதிப்பு
பேச்சிபாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.அணையின் பாதுகாப்பு கருதி பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரும் ,பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீரும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி மற்றும் பரளியாறு போன்ற ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதுபோல கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி விருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.