அழகிய நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா

திருமயம் மாவட்டத்தில் நாச்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் ஏற்பாடுகளை செய்து க.புதுப்பட்டி வகையறாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வழிப்பட்டனர்.

Update: 2024-01-22 07:15 GMT

அழகிய நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா

திருமயம் மாவட்டம்  க.புதுப்பட்டி அருகே அழகிய நாச்சியம்மன் கோயிலில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியார்கள். பொன்னமராவதி அருகே உள்ள க. புதுப்பட்டியில் அழகிய நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை கருடன் வட்டமிட சிவாசாரியார் விக்னேஷ் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை கும்பத்தில் உற்றி குடமுழுக்கு செய்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவில் ஆதித்தமிழனின் வீரத்தின் அடையாளமாக திகழும் வளரி எனும் கருவி காட்சிப்படுத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்கள் அதை பார்வையிட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை க.புதுப்பட்டி வகையறாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News