குடியாத்தம்: 2700லி கள்ள சாராய ஊறல் அழிப்பு!
குடியாத்தம் அருகே 2700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் போலீசாரால் அழிக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 10:16 GMT
சாராய ஊறல் அழிப்பு
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் ஆனந்தகிரி வனப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் சட்ட விரோதமாக காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2700 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் மற்றும் 120 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.