கங்கை அம்மன் கோவிலில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
குடியாத்தம் கங்கை அம்மன் கோவிலில் வைகாசி சிரசு விழாவையொட்டி உற்சவருக்கு பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் நடந்தது.;
Update: 2024-05-07 07:50 GMT
உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வைகாசி சிரசு பெருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் சந்திர ஓரையில் உற்சவருக்கு பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில் குடியாத்தம் கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு உற்சவரை மனம் மகிழ வழங்கி பரவசமடைந்தனர்.