சிறப்பாக பணியாற்றி குற்றச் செயலை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு!

திருப்பூர் மாவட்டத்தில்ரோந்துகளின் போது மிகச் சிறப்பாக பணியாற்றி குற்றச் செயல்களை தடுத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-05-29 14:12 GMT

திருப்பூர் மாவட்டத்தில்ரோந்துகளின் போது மிகச் சிறப்பாக பணியாற்றி குற்றச் செயல்களை தடுத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தாஉத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணியில் அதிகபட்ச காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு குற்றங்களைத் தடுத்து,   பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் , இம்மாதத்தில் இரவு ரோந்துகளின்போது மிகச்சிறப்பாக பணியாற்றி திருட்டுக்குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக பிடித்து, சட்டம் ஒழுங்கை சீராக பராமறிக்க பணியாற்றிய காவல் அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஊக்கப்படுத்தினார்.

பல்லடம் காவல்நிலையத்தின்  வடுகபாளையம் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  ஆயுதப்படை முதல்நிலைக்காவலர் ஸ்ரீதரன் மற்றும் ஊர்க்காவல்படை காவலர் அருள்ராஜ் இருவரும் அச்சமயத்தில் வயதான நபரிடம் செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோட முயன்ற அசாரூதீன் என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். உடுமலை காவல்நிலையத்தின்  அந்தியூர் சோதனை சாவடியில் இரவு ரோந்தில் இருந்த  முதல்நிலைக்காவலர் முருகவேல் என்பவர் அன்றிரவு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களை பிடித்துள்ளார். காங்கயம் காவல்நிலையத்தின்  படியூர் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  காங்கயம் துணைக்காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் காவலர் சதாம்உசேன் ஆகியோர்  இரவில் வீட்டை உடைத்து திருடிய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு  எதிரிகளை இருசக்கர வாகனத்தில் வந்தபோது பிடித்துள்ளனர்.

ஊத்துக்குளி காவல்நிலையத்தின்  டவுன் பகுதியில் இரவு ரோந்தில் இருந்த  காவலர் பாலு என்பவர் அப்பகுதியிலுள்ள ஒரு ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற சாஜகான்அலி என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

Tags:    

Similar News