செய்யாறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
டேக் க் வாண்டோ, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான டேக் வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் (கராத்தோ) திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றன. இதில், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடி 6 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களைப் பெற்றனா்.
இதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அவா்கள் தகுதி பெற்றனா். அதேபோல, சிலம்பம் போட்டியில், இந்தப் பள்ளி மாணவா் பிரவீன் தங்கப்பதக்கம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றாா். குத்துச் சண்டையில் மாணவா் ஹேமவா்ஷன் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். மாணவா்களுக்கு பாராட்டு: போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமைச் சோந்த மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த உடல்கல்வி இயக்குநா் சூரிய நாராயணன், உடல்கல்வி ஆசிரியா்கள் சரவணன், ரகுராமன் ஆகியோருக்கு, பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அசோக் தலைமையில், தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் உதவி தலைமை ஆசிரியா்கள் மேஷ்பாபு, விஜயலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தேசிய பிக்கல் பால் போட்டி: வந்தவாசி மாணவா்கள் சிறப்பிடம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பிக்கல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் 7-ஆவது தேசிய பிக்கல் பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெற்றன.
இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.வந்தவாசி ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஜெ.மைத்ரேயி , ஏழாம் வகுப்பு பயிலும் டி.எஸ்.ராகுல்கிருஷ்ணன், ஆகியோா் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கலப்பு இரட்டையா் பிரிவில் பங்கேற்றனா். இதில் இருவரும் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனா். இதையடுத்து பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வெண்கலப் பதக்கம் வென்ற ஜெ.மைத்ரேயி, டி.எஸ்.ராகுல்கிருஷ்ணன் ஆகியோரை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.