சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த ஆசிரியைக்கு பாராட்டு

அருமனை சந்திப்பில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆசிரியையை டிஎஸ்பி பாராட்டினார்.

Update: 2024-03-11 15:20 GMT

ஆசிரியை பாராட்டிய டிஎஸ்பி

கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிபின்.இவரது மனைவி சோனியா.இவர் பனச்சமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 9 ம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று விட்டு இரவு 10 மணி அளவில் கொண்டிருந்த போது அருமனை சந்திப்பில் வைத்து சாலையில் பை ஒன்று கிடந்துள்ளது.

அந்த பையை எடுத்து பார்த்த போது அதில் ஒரு கட்டு நோட்டு இருந்தது.இதை எடுத்து கணவன் மனைவி இருவரும் அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதனிடைய அருமனை போலீசார் பணத்தை தொலைத்தவர் யார் என்பது குறித்து உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார் மற்றும் ஷாஜி ஆகியோர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அருமனை மேல தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் பணத்தை தொலைத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சுரேஷ்குமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தார் பின்னர் பணத்தை கொடுத்த சோனியாவையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இன்று தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் சுரேஷ்குமாரிடம் அவர் தொலைத்த 16,420 ரூபாயை கொடுத்தார்.பின்னர் ஆசிரியை சோனியாவிற்கு டிஎஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News