குளச்சல் மீன்பிடி துறைமுகம் உடனடியாக விரிவாக்க செய்யப்படும்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் உடனடியாக விரிவாக்க செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Update: 2024-02-05 13:49 GMT
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு மீன்பிடித் துறைமுகம் கடந்த 2008இல் தொடங்கப்பட்டது. இங்கு சுமார் 300 -க்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. இந்த துறைமுகத்தை விரிவாக்கம்  செய்ய வேண்டும் என மீனவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.      

   இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீனவர்கள் ,அதிகாரிகள் துறைமுகம் விரிவாக்க சாத்தியம் குறித்து விளக்கி கூறினார்கள்.    

  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், மாநில திமுக மீனவர் அணி செயலாளர் ஸ்டாலின், மீன்பிடித்துறைமுக கோட்ட பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.       பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில் -  குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகள் குறித்து மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரிவாக்க பணிகள் நிச்சயமாக விரைவில் தொடங்கும் என்றார்.

Tags:    

Similar News