குமரி : கைரேகை பிரிவு நிபுணர்களை பாராட்டி சான்றிதழ்
பல்வேறு சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய உதவிய கைரேகை நுண்ணறிவு பிரிவினரை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.;
Update: 2024-06-14 06:11 GMT
கைரேகை நுண்ணறிவு பிரிவினருடன் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், வடசேரி, தக்கலை என மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பல சிக்கலான குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு கைரேகை நுண்ணறிவு பிரிவினர் சிறப்பாக செயல்பட்டனர். போலீஸ் விசாரணைக்கு உதவி செய்து, சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ரெத்ன சேகர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஜவஹர்லால், வினிதா, அமலா, தலைமைக்காவலர் கதிரேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்.