குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

குமரி மாவட்டத்தில் இருவரை போலீசாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2023-10-22 14:01 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி முத்து (23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதை தகராறில் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இசக்கிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Advertisement

இதை யடுத்து நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த இசக்கிமுத்து பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (20). இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே பூதப்பாண்டி போலீசில் வழக்கு உள்ளது.

வினேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டு இருந்த வினேசை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News