குமரி மாவட்ட நுகர்வோர் உரிமைகள் தின விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர்வோர் உரிமைகள் தினம் 2024 விழா நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது.;
நுகர்வோர் உரிமைகள் தின விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர்வோர் உரிமைகள் தினம் 2024 விழா நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் எ எஸ்.சுப்புலட்சுமி, குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் (ம) தலைவர் கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் எம்.தாமஸ், உதவி ஆணையர் (அமலாக்கம்) தொழிலாளர் நலத்துறை ஜெ. மணிகண்டபிரபு, கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் டி. சிதம்பரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் டி.உஷா மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மணிகண்டன் பேசும்போது பொதுமக்கள் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பண்டங்களில் உள்ள பொருட்களின் விபரம், அதன் எடையளவு, தயாரிக்கப்பட்ட காலம், காலாவதியான காலம் உள்ளிட்ட விபரங்களை முறையாக சரிபார்த்து வாங்க வேண்டும் என பேசினார். இது தொடர்பான குறைபாடுகள் எதுவும் இருந்தால் தொழிலாளர் நலத்துறை அமலாக்கப் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் நுகர்வோர் தின விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 17 பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.