குமரி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் அட்டை 

குமரி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் அட்டை வழங்கப்படஉள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2024-03-01 04:41 GMT
கலெக்டர் ஸ்ரீதர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் புதியது வழங்கும் முகாம்                  எஸ்.எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில் 04.03.2024 முதல் 07.03.2024 மற்றும் 09.03.2024 ஆகிய 5 நாட்கள் 04.03.2024 (திங்கட்கிழமை) அன்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 05.03.2024 (செவ்வாய்கிழமை) அன்று கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 06.03.2024 (புதன்கிழமை) அன்று விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 07.03.2024  (வியாழக்கிழமை) அன்று தோவளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் 09.03.2024 (சனிகிழமை) அன்று கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு இலவச பயண பேருந்து அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று /  பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவதற்கான அசல் சான்று / சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்றுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், UDID அட்டை நகல், மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருகை தந்து இலவச பேருந்து பணச்சலுகை அட்டை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
Tags:    

Similar News