குமரி : பிரமாண்ட கிறிஸ்மஸ் குடில் -பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Update: 2023-12-25 06:35 GMT

பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் காலங்களில் வீடுகள், தெருக்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்ற பகுதிகளில் அலங்கர மின் விளக்குகள், தோரணங்கள் போன்றவை நாட்டில் வேறந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக அமைப்பது வழக்கம். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன் தினம் திறக்கப்படும் இது போன்ற அலங்கார குடில்கள் ஜனவரி 1 - ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிப்பது வழக்கம். இவற்றை காண தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக வருவது வழக்கம்.     குமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம், புதுக்கடை அருகே வெள்ளையம்பலம், கருங்கல் அருகே பாலப் பள்ளம் போன்ற பகுதிகளில் பிரமாண்ட குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.     இதன் ஒரு பகுதியாக பாலப்பள்ளம் பகுதியில் சுமார் 40 லட்ச ரூபாய் பொருட்செலவில் வைக்கோல், கம்பிகள், சிமெண்ட் போன்ற உபகரணங்களால் புதிய எருசலேம் வடிவில் பிரமாண்ட கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குடிலின் உட்பகுதிகளில் இயேசு பாலனின் பிறப்பு முதல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்து நியாயவிசாரிப்பு வரையிலான சுருபங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News