பருவ மழை - காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் குவியும் மக்கள்

Update: 2023-11-02 07:49 GMT

மருத்துவமனையில் மக்கள் கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. காய்ச்சலுடன், சளி தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது. கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலை இருந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கால், கை வலி உட்பட உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கிறார்கள். சமீபகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
Tags:    

Similar News