மாநில வாள் விளையாட்டுப் போட்டி குமரி மாணவர்கள் சாதனை
மாநில வாள் விளையாட்டுப் போட்டி குமரி மாணவர்கள் சாதனை- 65 பதக்கங்களை குவித்தனர்
Update: 2024-01-30 10:37 GMT
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த போட்டிகள் கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 22 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகள் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் குமரி மாவட்ட அணியினர் 32 தங்கம், 12 வெள்ளி, ஒரு வெண்கலம் என 45 பதக்கங்களை வென்றனர். பெண்கள் பிரிவில் 10 தங்கம், ஒன்பது வெள்ளி, ஒரு வெண்கலம் என 20 பதக்கங்களை பெற்றனர். போட்டிகளில் குமரி மாவட்ட மாணவர்கள் 65 பதக்கங்களை குவித்து மாநில அளவில் சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை குமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக செயலாளர் அமர்ந்த ராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் மற்றும் பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களின் அணி மேலாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினார். கன்னியாகுமரி மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் நாராயணன் ஆகியோரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.