குப்ப கவுண்டன்வலசில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர் மாவட்டம், குப்ப கவுண்டன்வலசில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-11 11:07 GMT

கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, அஞ்சூர் கிராமத்தில் உள்ள குப்பகவுண்டன் வலசில், புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கள இசை உடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.

பின்னர் விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், நான்காம் கால யாக பூஜை, ஹோமம், ஸ்பர்ஷாகுதி, திரவியாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, யாத்ரா தானம் செய்து, புனித நீர் கோவில் கலசத்தைச் சென்று அடைந்தது. இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தசதானம், தச தரிசனம், கோ பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற்று, பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

Tags:    

Similar News