ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம்!

புதுக்கோட்டையில் ஸ்ரீ சோளீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2024-05-29 15:15 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டூர் கோவில்பட்டி ஸ்ரீ சோளீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை திருமயம் அருகே கோட்டூர் கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோளீஸ்வரர் உடனுறை சௌந்தர நாயகி அம்பாள் காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு சுற்று வட்டார பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து கடவுளை வழிபடுவார். பல்வேறு தோஷங்களை நீக்கும் ஆலயமாக திகழும் இந்த ஆலயத்தில் தோரண வாயல் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இப்பணிகள் இன்று நிறைவு பெற்று கும்பாபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

கடந்த மூன்று நாட்களாக பெறு கால பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து வைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோரண வாயில் மேல அமைக்கப்பட்டுள்ள கும்பக்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான உணவுகளையும் வழங்கிய இதனை அடுத்து இன்று மாலை நடன நிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டிய நிகழ்வுகள் ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News