குகநாதீஸ்வரா் கோவில் கும்பாபிஷேக பணி
கன்னியாகுமரியில் குகநாதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 08:48 GMT
கோவில் கும்பாபிஷேக பணி
கன்னியாகுமரியில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளும் தமிழக அரசின் திட்டத்தின்கீழ், இக்கோயிலிலும் திருப்பணிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில் முதல் கட்டமாக உபயதாரா்கள் மூலம் ரூ. 25 லட்சத்தில் தரைதளம், விமானம், கருவறை புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா, ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவசம்போா்டு மராமத்து பொறியாளா் ராஜ்குமாா், உதவி கோட்ட பொறியாளா் மோகன்தாஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், வள்ளலாா் பேரவை தலைவா் பத்மேந்திரா சுவாமிகள், குகநாதீஸ்வரா் பக்தா்கள் பேரவை தலைவா் எம்.கோபி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.