கும்பகோணத்தில் (பிப்.21)  “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” முகாம் 

கும்பகோணத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது

Update: 2024-02-20 11:50 GMT
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
மக்களை தேடிச் சென்று, அவர்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்”  என்ற  புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால்  அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை, ஒரு நாள் முழுவதும்  வட்ட  அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி  மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் (பிப். 21) புதன்கிழமை அன்று  கும்பகோணம் வட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் முகாம் மேற்கொண்டு, பிப்.21 காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணியளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், கும்பகோணம் வருவாய் கோட்ட  அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  மாலை 4.30 மணியளவில் கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவரால் மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வந்து அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News