அதிமுக ஆட்சியில் கும்பகோணம் தனி மாவட்டமாகும் - ஓ.எஸ்.மணியன்

2026 இல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கும்பகோணம் மாவட்டமாக ஆக்கப்படும் என ஓ.எஸ் மணியன் தெரிவித்தார்.

Update: 2024-03-24 07:17 GMT

தலைமை அலுவலகம் திறப்பு 

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் மயிலாடுதுறை திருஇந்தளூர் பகுதியில் திறக்கப்பட்டது. பாராளுமன்ற வேட்பாளர் ப.பாபு மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், கலந்து கொண்டனர்.

ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; அதிமுக தேர்தல் அறிக்கையும் திமுகவின் தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்விக்கு; அவருடைய கண்ணிலும் கருத்திலும் குறை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு நயா பைசா கூட புண்ணியம் இல்லாத தேர்தல் அறிக்கை, மிக மோசமான தேர்தல் அறிக்கை, இதுவரையிலும் திமுகவிலேயே மோசமான தேர்தல் அறிக்கையை தயார் செய்ததில்லை என்றார்.

எடப்பாடியார் கரங்களை வலுப்படுத்த வேண்டும், அவருடைய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு பொதுமக்களும் வாக்காளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கவும் என்கின்ற சட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசையும் ஏற்க செய்து சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இது விவசாயிகளுடைய நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிற ஒன்று. திமுக ஆட்சி காலத்தில் இன்சூரன்ஸ் தொகை 100% கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாகவும் , திமுக ஆட்சி வந்த பிறகு குருவைக்கான இன்சூரன்ஸ் பகுதியில் நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்.

பிரிமியம் தொகை செயல்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ‌.84,000 வரை கிடைத்திருக்கும் என்றார். மயிலாடுதுறை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு. ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். அதிமுக தனியே போட்டியிடுவதாக கேட்ட கேள்விக்கு அம்மா ஆட்சி காலத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பதாகவும் , இது ஒன்றும் புதுசு இல்லை என தெரிவித்தார். திமுக அரசு மக்களை ஏமாற்று விடலாம் என நினைக்கிறார்கள் , இறுதியில் அவர்களே ஏமாறுவார்கள் என விமர்சித்தார்.

கும்பகோணம் வருவாய் மாவட்டம் கொடுப்பது நியாயமான ஒன்று 2026ல் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார் என்ற கேள்விக்கு இந்த முறை அவர் அந்த செங்கல்லால் தலையிலும் நெற்றிலும் கொட்டிக்கொள்ள வேண்டியதுதான் ரத்தம் தான் வரப்போகிறது என விமர்சித்தார். பாமக வேட்பாளர் ஜெயலலிதாவின் படத்தை போஸ்டில் போட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதால் அதனால் எம்ஜிஆர் படத்தை அம்மா படத்தையும் போடுகிறார்கள் அம்மா படம் எம்ஜிஆர் படத்தை போட்டால் தான் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியும் என்ற எண்ணம் அனைத்து கட்சிகளும் வந்துவிட்டதாக கூறினார்.

Tags:    

Similar News