சேலத்தில் குங்பூ பெல்ட் தகுதி போட்டி
சேலத்தில் குங்பூ பெல்ட் தகுதி போட்டியில் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-29 13:19 GMT
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
சேலம் பிரபாத் ராஜசபரி தியேட்டரில் லீ ஷாவ்லீன் குங்பூ அனைத்து தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் குங்பூ பெல்ட் தகுதி சான்றிதழ் போட்டி பாண்டு ரங்கன் கோவில் அருகே உள்ள கன்னட சைனியர் சமூக திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு சங்க தலைவர் சிகான் பழனிவேல், செயலாளர் கிராண்ட் மாஸ்டர் சிஜோ ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு குங்பூ மாஸ்டர்கள் பவித்ரன், பூவரசு, பூவரசன், தமிழரசி கிரியேடிவ் பார்க் வெங்கடேஷ் ஆகியோர் பெல்ட் சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினர். இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.