திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு திருநாள் விழா!

திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஏந்தியபடி பவனியாக சென்றனர்.

Update: 2024-03-24 14:48 GMT
திருப்பூரில் குருத்தோலை ஞாயிறு திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் குறுத்தோலை ஏந்தியபடி பவனியாக சென்றனர். இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை கிறிஸ்தவர்கள் iஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த  பிப்ரவரி 14 ந் தேதி அன்று சாம்பல் புதன் திருநாளுடன் தவக்கால நிகழ்வு துவங்கியது. இதைபடுத்து  தவக்காலத்தின்  6-வது  வாரமான இன்று ஞாயிற்றுக்கிழமை . குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கேத்தரின் ஆலயம்., குமார் நகர் பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி ., தாவீதின் புதல்வனே ஓசானா பாடலை பாடியபடி பவணியாக சென்றனர் இதை அடுத்து தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான  கிறிஸ்தவ மக்கள் பக்தியுடன கலந்து கொண்டனர்
Tags:    

Similar News