சந்தான காளியம்மன் கோவில் திருவிழா - 16 அடி நீள அலகு குத்தி நேர்த்திக்கடன்

தேரழுந்தூர் சந்தான காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 16 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-09 04:03 GMT

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தான காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் 19 ஆம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று  விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் மற்றும் காப்பு கட்டி விரதம் இருந்து மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் கடும் வெயிலில் வீதி உலாவாக கோவிலை வந்தடைந்தனர்.

வழிநெடிகளும் பொதுமக்கள் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் 16 அடி நீளம் அலகு குத்தி அலங்காரத்துடன் கோவிலை வந்து அடைந்தது அனைவரையும் பக்தி பரவசத்தில் அழுத்தியது.

Tags:    

Similar News