கே வி குப்பம்: கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
கே வி குப்பம் அருகே கால்நடை துறை சார்பில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Update: 2024-06-13 07:17 GMT
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த முடினாம்பட்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் NADCP திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோபி கிருஷ்ணன், முடினாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.