கரும்பு வெட்டும் இயந்திரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலி

லால்குடி அருகே கரும்பு வெட்டும் இயந்திரம் மோதி படுகாயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.;

Update: 2024-02-09 08:42 GMT

 பைல் படம்

லால்குடி அருகே அன்பில் ஜங்கம்மராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லதம்பி (65). கூலித் தொழிலாளி. இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், மகனும், மகளும் உள்ளனா். இதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் என்பவரது கரும்புத் தோட்டத்தில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யப்பட்டு வந்தது. அப்போது, நல்லதம்பி கரும்புகளை அரிவாளால் வெட்டி இயந்திரம் முன்பு வீசிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கரும்பு வெட்டும் இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் அவரைப் பரிசோதனை செய்ததில் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இவ்விபத்து குறித்து தகவலறிந்த லால்குடி போலீஸாா் அங்குவந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் லால்குடி ஆய்வாளா் உதயகுமாா் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

Tags:    

Similar News