கூலித்தொழிலாளி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், மூங்கில்குடி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியை சேர்ந்தவர் அஜீத்குமார் (18), சென்ட்ரிங் தொழிலாளி. பொன்னமராவதி புதுவளவு பகுதியில் சகோதரிகள் ஆனந்தி, அகஸ்தியா ஆகியோருடன் வசித்து வந்தார்.
கோயம்புத்துாருக்கு வேலைக்கு சென்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அஜீத்குமார் கடந்த 16ம் தேதி இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, வீட்டு கொல்லையில் இருந்த கிணற்றின் கட்டையில் சேலையால் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது சகோதரிகள், உடலை மீட்க முயன்றபோது, சேலை அறுந்து அஜீத்குமார் உடல் கிணற்றுள் விழுந்தது.
இதில் சகோதரி அகஸ்தியாவும் கிணற்றின் உள்ளே தவறி விழுந்தார். தகவலறிந்ததும் பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து அகஸ்தியாவை பாதுகாப்பாக மீட்டதுடன், அஜீத்குமார் உடலையும் மீட்டனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.