பேருந்து சேவை குறைவால் மாணவர்கள் பாதிப்பு - முன்னாள் அமைச்சர்

கிராமப்புறங்களில் பேருந்து சேவை குறைவால் மாணவர்கள் பாதிப்பு - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்;

Update: 2024-01-02 17:40 GMT

கிராமப்புறங்களில் பேருந்து சேவை குறைவால் மாணவர்கள் பாதிப்பு - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை வாயிற் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழகத்தில் பழைய பேருந்துகளுக்கு புதிய பாடி கட்டி இயக்கப்படுகிறது எனவும், கிராமப்புறங்களில் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். வழித்தட பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் , 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை என்பதை 4 ஆண்டுகளாக மாற்றியும் இதுவரை போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைக்கவில்லை என்ற செங்கோட்டையன் , போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் எழுப்போம் என்றார்
Tags:    

Similar News