ஏரிக்கரை உடைப்பு - தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை
ஏரிக்கரை உடைப்பால் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல்ஏரி உள்ளது இந்த தாங்கல் ஏரியை நம்பி சுமார். 100க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் இந்த ஏரியை நம்பி பாசன விவசாயிகளும் கிணற்று விவசாயிகள் நம்பி உள்ளனர் மழை ஒரு வார காலத்திற்கு பிறகு ஓய்ந்து இருந்த நிலையில் விவசாயிகள் சில பேர் நடவும் பலர். நாற்றுவிட்டு இருந்த நிலையில் நாற்றங்கால் நெல் மணிகள் தண்ணீரில் அடித்து செல்ல பட்டனஅதிகாரிகளுக்கு பல முறை தகவல் கொடுத்தும் அதிகாரிகள் வரவில்லை எனவும் உடனடியாக இந்த ஏரி உடைப்பு சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை மேலும் சுமார் 14 லட்சம் செலவில் ஏரியின் மதகு மற்றும் ஏரி புனரமைப்பு செய்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது விவசாயிகள் கூறுகையில் தரமற்ற முறையில் மதகை கட்டியதே தற்போது உடைப்பு ஏற்படதற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.