கடும் வெயிலால் ஏரிகள் வறட்சி - விவசாயிகள் கவலை!
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால், குளம், கிணறு, குட்டை மற்றும் ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்ற நிலையில் தற்போது விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 07:32 GMT
ஏரிகள் வறட்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால், குளம், கிணறு, குட்டை மற்றும் ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டு வருகின்றன. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமாபுரம், பெரியகளக்காட்டூர், பழையனூர் உட்பட, 30 கிராமங்களில், 34 ஏரிகள் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் பல ஏரிகள் கோடைக்காலத்திலும் வற்றாமலும் இருக்கும். எனவே பல ஏக்கரில் விவசாயிகள், இதன் உபரி நீரை கொண்டு விவசாயம் செய்வர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலால், இந்த ஏரிகள் 20 - -50 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால், இந்த ஏரி உபரிநீரை நம்பியிருந்த ஏராளமான விவசாயிகள், தற்போது விவசாயம் செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து ஏரிகளிலும் நீர் முழுதும் வறண்டு விடும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.