தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை விபரம் - ஆட்சியர் தகவல்
தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-06-09 04:17 GMT
ஆட்சியர் அலுவலகம்
தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழ்நாடு நில அளவை நிலவரி திட்டத்துறை சார்பாக www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையதள சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தமிழ் நிலம் செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்