நில உரிமையாளர்கள் புகார்

Update: 2023-11-23 08:55 GMT

இடித்து அகற்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒட்டன்சத்திரம் லெக்கையன்கோட்டை பகுதியில் ரோடு விரிவாக்க பணிகளுக்காக இழப்பீட்டுத் தொகை வழங்காமல் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடப்பதாக,'' நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

லெக்கையன்கோட்டையில் இருந்து காமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.சில இடங்களில் பணிகள் முடிந்தும் வேறு சில இடங்களில் பணிகள் நடந்தும் வருகின்றன.

லெக்கையன் கோட்டை பகுதியில் ரோடு விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கொடுத்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காமல் இருந்ததால் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்காக நிலங்களில் இருந்த தென்னை மரங்கள், கடைகள், கட்டடங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

சிலர் தாங்களாகவே கடைகளின் கூரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடப்பதாக நில உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News