மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
கோவில்பட்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். ;
Update: 2024-01-28 01:40 GMT
அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, தலைமைக் கழக பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து காெண்டனர்.