திருப்பூர் அரிசி கடை வீதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருப்பூர் அரிசி கடை வீதியில் அஇஅதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-25 09:36 GMT

 பொள்ளாச்சி.வி.ஜெயராமன் 

இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கிற சக்தியாக எடப்பாடியார் திகழ்வார், தமிழர்களின் உரிமையை நிலைநாட்டும் சக்தியாக எடப்பாடியார் உருவே எடுப்பார் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசினார். மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாத்திய பகுதி சார்பில் திருப்பூர் மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில் அரிசி கடை வீதியில் பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று சிறப்புரையாற்றி 7,600 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், சிவசாமி, பழனிச்சாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசுகையில், எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் பலர் முகம் தெரியாமல் போய்விடுகின்றனர், ஆனால் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் இத்தனை தாய்மார்கள் இங்கு புன்னகையோடு அவரது பிறந்த நாள் விழாவை கொண்டாட வந்துள்ளீர்கள், ஒரு அரசியல் கட்சி பொதுக்கூட்டத்திற்கு இத்தனை மகளிர் வந்துள்ளீர்கள் என்றால் அது அம்மா அவர்கள் பொதுவாழ்வில் வந்த பிறகு ஏற்பட்ட மாபெரும் புரட்சிதான் இந்த மகளிர் கூட்டம், அம்மாவின் ஆட்சி வந்த பிறகுதான் தமிழகத்துக்கு பல நன்மைகள் தேடி வந்தது, உலகத்தில் எந்த நாடுகளிலும் வழங்காத தாலிக்கு தங்கம் என்ற ஒப்பற்ற திட்டத்தை வழங்கினார், அதே போன்று அனைத்து மக்களும் விஞ்ஞானபூர்வமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதை வெற்றிகரமாக நடத்தியவர் அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆவார், மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா அவர்கள், அதனால்தான் நன்றி உணர்வோடு பல தாய்மார்கள் இங்கு திரண்டு வந்து உள்ளீர்கள், 2014 ஆண்டில் தனி ஒரு பெண்மணியாக நின்று நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை போட்டியிட வைத்து வெற்றி சரித்திரம் படைத்தார், மோடியா லேடியா என்று தபால் விட்ட பொழுது மாபெரும் வெற்றி தந்து உலக சாதனை படைத்தவர் அம்மா, அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மீண்டும் 234 தொகுதிகளிலும் எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து போட்டியிட்டு மாபெரும் ஒன்ற ை மூன்றாவது முறையாக தந்து முதல்வரானார், அதை தொடர்ந்து புரட்சி தலைவர் மற்றும் தலைவி ஆகியோர் இல்லாத காலகட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் வந்து உலக அளவில் இரண்டரை கோடி தொண்டர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்த ஒப்பற்ற கட்சியாக உருவாக்கியவர் எடப்பாடியார் ஆவார், 2021 தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்ற தலைவர் எடப்பாடியார், தோல்வியை சந்தித்தாலும் அதன் பிறகு இரண்டு பட்ட சக்தியை ஒன்றாக்கி, அதிமுக பொதுச்செயலாளராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார், மாபெரும் மக்கள் தலைவராக எடப்பாடியார் திகழ்கிறார், எடப்பாடியார் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறார், சில பத்திரிக்கை, ஊடகங்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்புகின்றனர், ஆனால் மக்களோடு மட்டுமே எடப்பாடியார் கூட்டணி வைப்பார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்று பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் இடத்தில் திகழ்வார், மாபெரும் சக்தியாக திகழ்வார், உலகமே அவரை திரும்பிப் பார்க்கும், தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நீங்கள் அனைவரும் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசினார்.
Tags:    

Similar News