புதிய பேருந்து சேவை துவக்கம்.!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் எதிரொலியாக, பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2023-10-27 16:11 GMT

புதிய பேருந்து சேவை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூரில் இருந்து, மாரியம்மன் கோவில் வழியாக, எம்.ஜி.ஆர் நகர், நெல்லித்தோப்பு, குமிழக்குடி, சீதம்பாடி, கோனூர், மாடி, மூங்கிலடி, அண்ணா தோட்டம், கலக்குடி வரை செல்ல அரசுப் பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது.  அப்போது, நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி பேருந்து சேவை துவக்கப் படாமல் இருந்தது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவிலூரில் இருந்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, பேருந்து வசதி கேட்டு, நடைப்பயணம் இன்று (அக்.28, வியாழக்கிழமை) காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போராட்ட அறிவிப்பு எதிரொலியாக, அக்.26 வியாழக்கிழமை மாலை, கலக்குடியில், அரசுப் பேருந்து சேவை, துவக்கி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மாலதி, அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.முனியாண்டி, யூ.சரவணன், ஆத்தூர் ஏ.முகமது அலி, மாரியம்மன் கோவில் வி.தங்கையன், கோனூர் வி.கதிரேசன் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள், அம்மாபேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர் வீ.கலைச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலக்குடி அகிலா சங்கர், நெல்லித்தோப்பு ராஜாத்தி ராஜன், ஆலக்குடி ப.புண்ணியமூர்த்தி, போக்குவரத்து கழகம் டி.எம்.பாலமுருகன், ஏ.எம்.கருப்புசாமி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேருந்து வசதி துவக்கப்பட்டதால், மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், இதற்கு காரணமாக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு, நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News