மத்திய அரசை கட்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம் !
மத்திய அரசை கட்டித்து பரமத்தி நீதி மன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம், தி.மு.க வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசின் இப்புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி பரமத்தி நீதிமன்ற வழக்கறிஞர்கள் தி.மு.க வழக்கறிஞர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்தும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த இளங்கோவன், தனகரன், சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.