புதிய சாலைக்கு அடிக்கல்: அமைச்சர் பங்கேற்பு

புதிய சாலைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ .வி .மெய நாதன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-12-22 09:55 GMT

சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஒன்றியம், கொத்தக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சாலை மேம்பாட்டிற்க்காக NABARD XXIX திட்டத்தின்கீழ் வேங்கிடகுளம் சாலைமுதல் கொத்தக்கோட்டை ஊராட்சி அலுவலகம் வரை 51.13 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணியை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் KPK.T.T.வள்ளியம்மை தங்கமணி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வி. மெய்ய நாதன் திமுக அரசு என்றென்றும் மக்களுக்கு, எது தேவையோ அதனை சிறப்பாக செய்யும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்பகுதி பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அப்பொழுது இப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர் அந்த மனுவில் எங்கள் கிராமத்திற்கு புதிய சாலை அமைத்து தர வேண்டும். தற்பொழுது அந்த சாலை சிதலைடைந்துள்ளது என தெரிவித்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் புதிய சாலை போடுவதற்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம் ,தொடர்ந்து உங்களுக்கு என்ன தேவையோ அதனை செய்ய திமுக அரசு என்றென்றும் தயாராக உள்ளது என பேசினார்.

Tags:    

Similar News